மத்திய அரசு பாரபட்சம்: கன்னியாகுமரி விவசாயிகள் புலம்பல்

 
farmers

கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் தற்போது பாக்டம்பாஸ் என்ற அடி உரம் போட முடியாமல் தவித்து வருகின்றனர் என்று தகவல் வெளிவந்துள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல் பருவ நெல் சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பயிரிடப்பட்ட பயிர்கள் மற்றும் மீண்டும் நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர் 

இந்த நிலையில் பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணை திறக்கப்பட்டு 150 கன அடி தண்ணீர் விடப்பட்டுள்ளது. இதனால் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வேளையில் விவசாயத்திற்கு தேவையான பாக்டம்பாஸ் உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

மத்திய அரசு தான் இந்த பாக்டம்பாஸ் உரத்தை விநியோகம் செய்து வரும் நிலையில் போதுமான பாக்டம்பாஸ் உரத்தை கன்னியாகுமரி பாக்டம்பாஸ் மத்திய அரசு ஒதுக்காததால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர். விரைவில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பாக்டம்பாஸ் உரத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

From around the web