செம ஐடியா: கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றிய சென்னை மேயர்!

 
செம ஐடியா: கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்றிய சென்னை மேயர்!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய மாநில அரசுகள் திண்டாடி வருகின்றன

இந்த நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டுமின்றி அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ambulance

இந்த நிலையில் சமீபத்தில் சென்னை மேயராக பதவி ஏற்றுக்கொண்ட ககன்தீப் சிங் அவர்கள் மாற்றி யோசித்ததன் விளைவாக தற்போது கார்கள், ஆம்புலன்ஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. சுமார் 250 கார்களை ஆம்புலன்ஸ்களாக மாற்ற மேயர் ககன்தீப் சிங் அவர்கள் உத்தரவிட்டுள்ளதை அடுத்து தற்போது சென்னையின் 15 மண்டலங்களில் கார் ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆம்புலன்ஸ்களுக்கு சிறப்பு ஆம்புலன்ஸ்கள் என பெயரிடப்பட்டுள்ளன. 

இந்த ஆம்புலன்ஸ்கள் நோயாளிகளை மருத்துவமனைக்கும், மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கும் செல்ல பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பலர் பாராட்டு தெரிவித்து உள்ளனர் 

From around the web