வழக்குகள் வாபஸ்: சட்டமன்றத்தில் முதல்வர் அதிரடி அறிவிப்பு!

 
stalin

எட்டு வழி சாலைக்கு எதிராக போராடியவர்கள் உள்பட பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் என சட்டமன்றத்தில் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். 

எட்டு வழி சாலை திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் என்று அறிவித்த முதல்வரின் அறிவிப்பால் சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். 

அதுமட்டுமின்றி மீத்தேன், நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளும் வாபஸ் என்றும், சிஏஏ சட்டத்திற்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் தமிழ்நாடு அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

அறவழியில் போராடிய பொதுமக்கள் மற்றும் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை முதலமைச்சர் வாபஸ் பெற்று உள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web