அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு!

பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து என தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என அண்ணா பல்கலை கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் கடிதம் எழுதியதாக கூறப்பட்ட நிலையில்
 

பொறியியல் மாணவர்களின் அரியர் தேர்வு ரத்து என தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது என அண்ணா பல்கலை கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் கடிதம் எழுதியதாக கூறப்பட்ட நிலையில் அந்த கடிதத்தை இன்று காலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா அவர்கள் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

இந்த நிலையில் தற்போது அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறித்து முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெறுகிறது 

அரியர் தேர்வு ரத்து என்ற முடிவை ஏற்க முடியாது என ஏற்கனவே அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் கடிதம் எழுதிய நிலையில் தற்போது திடீரென இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இதுகுறித்து முன்னால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி அவர்கள் கூறியபோது தமிழகத்தில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிப்பு செய்திருப்பது விசித்தரமானதாக இருப்பதாகவும் பல்கலைக்கழகம் கற்பனையாக தேர்வு நடத்தி மாணவர்களை தேர்ச்சி பெற செய்வதில்லை என்றும் பல்கலைக்கழகங்கள் என்பது தன்னாட்சி அதிகாரம் பெற்றது என்றும் கூறியுள்ளார். சிண்டிகேட் செனட் கல்வி குழு என அதிகாரமிக்க அமைப்புகளின் வழிகாட்டுதல் படிதான் தேர்வுகள் நடத்தி மாணவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்க முடியுமே தவிர தமிழக அரசு அறிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார் 

From around the web