தியேட்டர்களில் 100% இருக்கை அனுமதியை எதிர்த்து வழக்கு: நாளை விசாரணை என தகவல்

தமிழக முதல்வரை சமீபத்தில் சந்தித்த நடிகர் விஜய் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வர் சமீபத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கி அரசாணை ஒன்றை பிறப்பித்தார்
இந்த உத்தரவுக்கு ஏற்கனவே மத்திய அரசு கண்டனம் தெரிவித்து உள்ளது என்பதும் திரையுலகைச் சேர்ந்த அரவிந்த்சாமி கஸ்தூரி உள்பட ஒருசிலர் கண்டனம் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை அனுமதியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளில் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்ற அனுமதியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் முறையீடு செய்துள்ளனர்
வழக்கறிஞர்களின் இந்த முறையீட்டை நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். நாளை திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கப்படுமா? அல்லது ரத்து செய்யப்படுமா என்றும் தெரிய வரும்