எங்கள் தயவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது: திமுகவுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை 

 

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழட்டிவிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அப்படியே பிடிவாதமாக காங்கிரஸ் கட்சி இருந்தாலும் அக்கட்சிக்கு பத்துக்கும் குறைவான தொகுதிகளை ஒதுக்க திமுக திட்டமிட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் காங்கிரஸ் தயவு இல்லாமல் திமுக தமிழகத்தில் ஆட்சியமைக்க முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த  தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் காங்கிரஸ் கட்சியின் தயவு இல்லாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று கூறியுள்ளார்.  அவருடைய இந்த கருத்து திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து கட்சிகளே தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ளதால் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தினேஷ் குண்டுராவ் கூறியுள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை திமுக கழட்டி விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் 

From around the web