ஒருநாள் அசைவம் இல்லாமல் இருக்க முடியாதா? மீன் மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்!

 
ஒருநாள் அசைவம் இல்லாமல் இருக்க முடியாதா? மீன் மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு தினமும் 10 ஆயிரத்தை கடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று 14 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் ஒரு பக்கம் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி கொண்டிருந்தாலும் அதை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்குவதற்காக கூட்டம் குவிந்து இருப்பதை பார்க்கும் போது பெரும் அச்சம் ஏற்படுகின்றது 

fish market

நாளை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு என்பதால் எந்த கடையும் திறந்திருக்காது. இதனை அடுத்து இன்றே காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க தனிமனித இடைவெளியின்றி குவிந்த கூட்டத்தால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மீன் வாங்க வந்தவர்களில் பெரும்பாலோர் மாஸ்க் கூட அணியவில்லை என்பது துரதிர்ஷ்டமான ஒன்று, 

போலீசார் எச்சரிக்கையையும் மீறி கட்டுக்கடங்காமல் மீன்களை வாங்க பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு இருந்ததை பார்க்கும்போது அவர்கள் மீன் வாங்க வந்தார்களா அல்லது கொரோனாவை விலைக்கு வாங்கி வந்தார்களா? என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் ஒரு நாள் மீன் சாப்பிடாமல் இருக்க முடியாதா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்

From around the web