பணம் கொடுத்தும் ஓட்டு போடாதவர்களை திட்டி ‘போஸ்டர்’ ஒட்டிய வேட்பாளர்!

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் அதில் பல சுவாரசியங்கள் இருந்ததை ஏற்கனவே நாம் பார்த்தோம். 21 வயது கல்லூரி மாணவிகள் முதல் 80 வயது குடுகுடு கிழவிகள் வரை இந்த தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் முதல் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் மாறினார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் என்றாலே பணம் புகுந்து விளையாடும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட
 
பணம் கொடுத்தும் ஓட்டு போடாதவர்களை திட்டி ‘போஸ்டர்’ ஒட்டிய வேட்பாளர்!

நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் அதில் பல சுவாரசியங்கள் இருந்ததை ஏற்கனவே நாம் பார்த்தோம். 21 வயது கல்லூரி மாணவிகள் முதல் 80 வயது குடுகுடு கிழவிகள் வரை இந்த தேர்தலில் வெற்றி பெற்று கவுன்சிலர்கள் முதல் ஊராட்சி ஒன்றிய தலைவராகவும் மாறினார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் என்றாலே பணம் புகுந்து விளையாடும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது

இருப்பினும் பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு சில வேட்பாளருக்கு வாக்காலர்கள் பட்டை நாமம் போட்ட சம்பவங்களும் நடந்துள்ளது

அந்த வகையில் மன்னார்குடி அருகே கீழப்பனையூர் என்ற கிராமத்தில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட ஒரு வேட்பாளர் மிக அதிகமாக செலவு செய்துள்ளார். ஒவ்வொரு வாக்காளருக்கும் 100 முதல் 500 ரூபாய் வரை அவர் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது

இருப்பினும் அவருக்கு ஓட்டு போடாமல் அவரை அந்த பகுதி மக்கள் தோற்கடித்தனர். இதனால் கடுப்பாகிய அந்த வேட்பாளர் ’காசு வாங்கிய நாயே ஓட்டு போட்டாயா’ என்று போஸ்டர் அடித்து அந்த பகுதி முழுவதும் ஒட்டியுள்ளார் இந்த போஸ்டரால் அந்த பகுதி மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web