பள்ளிகள் திறப்பு ரத்தா? பரபரப்பு தகவல்

 
school

செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டிருந்தது 

அதேபோல் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கண்டிப்பாக வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டிருந்ததூ.

இந்த நிலையில் தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதும், தினந்தோறும் அங்கு 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இதனையடுத்து இன்று முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனையில் கேரள மாநில எல்லையில் உள்ள பள்ளிகளை மட்டும் திறக்க வேண்டாம் என்றும் வழக்கம்போல் ஆன்லைன் வகுப்புகள் தொடரலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே கேரள மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web