நீட் தேர்வு ரத்து: அமைச்சர் உறுதி

 
neet

தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் சற்றுமுன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்படும் தாக்கம் குறித்து தற்போது ஏகே ராஜன் தலைமையிலான ஆணையம் விசாரணை செய்து வருகிறது. இந்த ஆணையம் இன்னும் ஒரு சில நாட்களில் தமிழக முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி ஏகே ராஜன் அவர்களின் ஆணையத்தின் பரிந்துரையை அடிப்படையில் நீட் தேர்வு ரத்து என்ற சட்டம் இயற்றப்பட்டு நீட்தேர்வு கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்

மேலும் தமிழகத்திற்குள் நீட் தேர்வு நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு ரத்து செய்து இருக்கிறோம் என்றும் அதேபோல் நீட் தேர்வு கண்டிப்பாக ரத்து செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

From around the web