முடியுமா? முடியாதா? பிரசாத் ஸ்டுடியோவுக்கு ஐகோர்ட் 30 நிமிட கெடு!

 

இளையராஜாவை அனுமதிக்க முடியுமா? முடியாதா? என பிரசாத் ஸ்டுடியோவுக்கு ஹைகோர்ட் 30 நிமிட கெடு கொடுத்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பிரசாத் ஸ்டுடியோவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். சதீஷ்குமார் விதித்துள்ள கெடுவை அடுத்து பிரசாத் ஸ்டுடியோ இறங்கி வந்துள்ளதாகவும் தெரிகிறது

சென்னை ஐகோர்ட்டின் கடுமையான கெடுவை அடுத்து நிபந்தனைகளுடன் இளையராஜாவை அனுமதிக்க தயார் என பிரசாத் ஸ்டுடியோ தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பிரசாத் ஸ்டுடியோ நிலத்தை இளையராஜா உரிமை கோர கூடாது என நிபந்தனை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

ilaiyaraja

மேலும் உதவியாளர், இசைக்கலைஞர், வழக்கறிஞர் மட்டும் இளையராஜாவுடன் வரவேண்டும் என்றும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த நிலையில் பிரசாத் ஸ்டுடியோ நிபந்தனைகளை ஏற்று இன்று மாலை பதில் மனு தாக்கல் செய்வதாக இளையராஜா தரப்பு கூறியுள்ளது. இதனையடுத்து பிரசாத் ஸ்டுடியோ- இளையராஜா வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது

From around the web