ஆதார் எண் இருந்தால் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி தேர்வு எழுத முடியுமா?

 

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுத ஆதார் எண் பதிவு அவசியம் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழக அரசு பல்வேறு பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்வுகளை எழுதி அரசு பணியில் சேர ஆர்வம் கொண்டு லட்சக்கணக்கான இளைஞர்கல் இந்த தேர்வுக்காக விண்ணப்பம் செய்து வருகின்றனர் என்பதும் இந்த போட்டித் தேர்வு எழுதுவதற்காக தீவிரமாக பயிற்சி எடுத்து விண்ணப்பதாரர்கள் ஆர்வத்துடன் எழுதி வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

tnpsc

இந்த நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு எழுத ஆதார் எண் பதிவு அவசியம் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிரந்தர பதிவில் ஆதார் எண் பதிவு செய்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பெற முடியும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் குரூப்-1 தேர்வு, உதவி இயக்குனர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் பெற ஆதார் எண் பதிவு கட்டாயம் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது 

மேலும் ஆதார் எண் பதிவு விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆதார் எண் இருந்தால் மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web