37 எம்பிக்களும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரலாமே? அதிமுக எம்.எல்.ஏ கேள்வி

 

நீட் விவகாரத்தில் கடந்த சில வாரங்களாக திமுக மற்றும் அதிமுக மாறி மாறி அரசியல் செய்து வருகிறது என்பதும் நேற்றைய சட்டசபை கூட்டத் தொடரின்போது நீட் தேர்வு யாருடைய ஆட்சியின்போது அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் காரசாரமாக வாதம் செய்தனர் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இன்றைய சட்டசபை கூட்டம் கூடியவுடன் நீட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு திமுக தொடர்ந்து அழுத்தம் தரும் என முக ஸ்டாலின் கூறினார் 

இதற்கு பதில் அளித்து பேசிய அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ’நீட் விவகாரத்தில் திமுகவின் 37 எம்பிக்களும் ராஜினாமா செய்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரலாமே என்று கூறினார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கேள்விக்கு முக ஸ்டாலின் எந்த பதில் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

From around the web