மீண்டும் பிசியானது சென்னை சாலை: இரண்டு நாள் தளர்வுகள் சரியா?

 
lockdown

கடந்த இரண்டு வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் நாளையும் ஊரடங்கு இல்லை என தமிழக அரசு அறிவித்ததை அடுத்து சென்னை சாலைகளில் மீண்டும் பிஸியாக உள்ளது. குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள் குவிந்து வருகின்றனர் என்பதும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெளியூர் செல்லும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 

வழக்கம்போல் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருசிலர் மாஸ்க் அணியாமல் இருப்பது கொரோனாவின் அச்சத்தைக் கூட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட 14 நாட்களில் சரியானபடி திட்டமிட்டுத் கட்டுபாடுகளை அறிவித்து இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்றும் இதுவரை போடப்பட்டிருந்த ஊரடங்கு வீணாகிவிட்டதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

lockdown

குறிப்பாக இன்றும் நாளையும் அத்தியாவசிய கடைகள் மட்டுமின்றி அனைத்து கடைகளையும் திறக்கலாம் என அனுமதி அளித்தது தவறான முடிவு என்றும் பலர் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கம் அரசுக்கு இருந்தாலும் அரசு எடுக்கும் தவறான முடிவு காரணமாகவும் பொதுமக்களின் பொறுப்பின்மை காரணமாகவும் கொரோனா வைராச் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

From around the web