பேருந்துகள் இயங்காது: தனியார் பேருந்து உரிமையாளர்கள் அறிவிப்பு!

 
buses

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்ததை அடுத்து தற்போது பேருந்துகள் இயங்கி வருகிறது என்பது தெரிந்ததே. ஆனால் அதேசமயம் 50 சதவீத பயணிகளுக்கு மட்டுமே பேருந்துகளில் அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் 100% பயணிகளை அனுமதிக்கும் வரை பேருந்துகளை இயக்க மாட்டோம் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் மட்டுமே தனியார் பேருந்துகளில் இயங்கி வருவதாகவும் ஆனால் அதுவும் லாபம் இன்றி இயங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பழனிசாமி இது குறித்து கூறிய போது ’தற்போது பெட்ரோல் டீசல் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்குவது சாத்தியமில்லை என்றும் அரசு எப்பொழுது 100 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடுகிறதோ, அப்போதுதான் தனியார் பேருந்துகள் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

From around the web