மின்கம்பி மீது பேருந்து உரசிய விபத்து: மனித உரிமை ஆணையம் உத்தரவு

 

தஞ்சை அருகே நேற்று தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருக்கும்போது லாரியை முந்துவதற்கு முயற்சி செய்யும்போதும் உயர் மின் கம்பியில் உரசியதால் மின்சாரம் பேருந்துக்குள் பாய்ச்சியது. இதனால் பேருந்திலிருந்த 4 பேரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பதும் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த விபத்துக்கு தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உயரழுத்த மின்கம்பிகளை உயரமான இடத்தில் பொருத்த வேண்டும் என்று ஏற்கனவே அந்த பகுதியில் உள்ளவர்கள் கோரிக்கை விடுத்தும் மின்சார துறையினர் கவனக்குறைவு காரணமாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததே இந்த விபத்துக்கு காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினர்

human

இந்த நிலையில் தஞ்சாவூரில் மின்கம்பி மீது பேருந்து உரசிய விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விபத்து குறித்து டான்ஜெட்கோ தலைவர், தஞ்சை கண்காணிப்பு பொறியாளர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மின்சாரம் துறையினருக்கு மனித உரிமை ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

From around the web