பட்ஜெட் 2021: எல்.ஐ.சி. பங்குகள் விற்பனை, தனியார்மயமாகும் வங்கிகள்

 

எல்.ஐ.சி. பங்குகளை விற்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் ஒருசில வங்கிகள் தனியார்மயமாகும் என்றும் இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

எல்.ஐ.சி.,யில் பொது முதலீட்டுக்கு அனுமதிக்கப்படும் என்றும், இந்த ஆண்டு முதல் எல்.ஐ.சி பங்குகள் விற்பனை தொடங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். எல்.ஐ.சி. பங்குகளை விற்பதன் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி திரட்ட முடியும் என கூறப்படுகிறது. எல்.ஐ.சி நிறுவன பங்குகளை தனியாருக்கு அதாவது பொதுமக்களுக்கு பங்குகளை விற்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

idbi

அதேபோல் ஐடிபிஐ வங்கி முற்றிலும் தனியார்மயாகும் என்றும் மேலும் 2 பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடித் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும் என்றும், வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் தொடங்கப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து திட்டத்திற்காக ரூ1,624 கோடி ஒதுக்கீடு என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநிலங்கள் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பது குறித்து முடிவெடுக்கலாம் என்றும், குஜராத்தில் பொருளாதார தொழில்நுட்ப முனையம் உருவாக்கப்படும் என்றும், நாடு முழுவதும் 100 புதிய சைனிக் பள்ளிகள் அமைக்கப்படும் என்றும், தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும் என்றும், நாடு முழுவதும் 15,000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

From around the web