முதல்வரின் சேலம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை!

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சேலம் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 

கடந்த சில மாதங்களாக திரை உலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவதும், அதன் பின்னர் அது புரளி என்பது தெரிய வருவதும் குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்.

edappadi

அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சேலம் இல்லத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தனர். இதனை அடுத்து முதல்வரது சேலம் வீடு தீவிர சோதனை செய்யப்பட்டது. ஆனால் சோதனைக்கு பின்னர் வெடிகுண்டு மிரட்டல் என்பது வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதனை அடுத்து தொலைபேசியில் முதல்வரின் வீட்டிற்கு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web