அதிமுக முகமூடியை கழட்டினால் பாஜக இருக்கும்: ராகுல்காந்தி

 
அதிமுக முகமூடியை கழட்டினால் பாஜக இருக்கும்: ராகுல்காந்தி

தற்போதைய அதிமுக பழைய அதிமுக இல்லை என்றும் அதிமுக முகமூடி அணிந்து இருப்பதாகவும் அந்த முகமூடியை கழட்டினால் அதில் பாஜக தான் இருக்கும் என்றும் சேலம் மாநாட்டில் ராகுல்காந்தி பேசியுள்ளார் 

மேலும் தமிழகம் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை மதிக்காத இந்தியா ஒரு இந்தியாவாகவே இருக்காது என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தற்போதைய முதல்வர் பழனிசாமி ஊழல் செய்துள்ளதால் மோடிக்கு பயப்படுகிறார் என்றும், மோடியை எதிர்த்தால் சிபிஐ அவரது வீட்டில் ரெய்டு வரும் என்பதால் அவர் கும்பிட்டுக் கொண்டு இருக்கிறார் என்றும் இது தவிர அவருக்கு வேறு வழி என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்

rahul

மேலும் இந்தியா பல்வேறு மாநிலங்களின் ஒருங்கிணைப்பு என்றும் எந்த மொழியும் கலாச்சாரமும் இன்றியமையாதது என்றும் தமிழ் மொழி அனைத்து மொழிகளுக்கும் முன்னோடியானது என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்

சேலத்தில் நடைபெற்று வரும் பிரம்மாண்டமான மாநாட்டில் ராகுல்காந்தி, ஸ்டாலின் மட்டுமின்றி வைகோ உள்பட பல கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதே கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், மதவாதக் கும்பலிடம் மாட்டி தவிக்கும் இந்தியாவை காக்க வேண்டும் என்றும் அதற்காக இப்பொழுதே தமிழகத்தில் உள்ள கூட்டணி போலவே இந்திய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும் சேலத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பேசினார் 

From around the web