பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது: காவல்துறையில் பாஜக புகார்

 
biggboss

பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே நான்கு சீசன்கள் முடிவடைந்து விட்ட நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது என்பதும் இந்த சீசனின் முதல் புரோமோ வீடியோ சற்று முன் வெளியாகி வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்திற்கு எதிராக இருப்பதால் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப அனுமதிக்கக்கூடாது என பாஜகவினர் காவல் துறையில் புகார் அளித்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை காவல் நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி இந்து கலாச்சாரத்துக்கு எதிராகவும், நிகழ்ச்சி பங்கேற்பாளர்களை அதிக மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதாகவும், பங்கேற்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததாகவும் உள்ளது.

கொரோனா மூன்றாவது அலை தீவிரமாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையிலும், கொரோனா காரணமாக கோயில்களை திறக்கவும், விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு வரும் நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி தேவையற்றது.

இதில், நிகழ்ச்சி தயாரிப்புக்காக 500க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடுகின்றனர். எனவே, கொரோனா காலத்தில் கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகார் மனுவை காவல் நிலையத்தில் அளித்தபோது, பாஜக மாவட்ட, நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

From around the web