மதிய உணவில் வாழைப்பழம்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

 
banana

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்களும் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஷ் அவர்களும் பதவியேற்ற பின்னர் பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது பள்ளி குழந்தைகள் சாப்பிடும் மதிய உணவில் வாழைப்பழம் வழங்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். வாழை விவசாயிகள் வாழ்வாதாரம் அதிகரிக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் முதலமைச்சர் அனுமதி அளித்ததும் பள்ளி குழந்தைகளுக்கு வாழைப்பழம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்து வருவதாகவும், இது குறித்து அறிக்கையை ஜூலை 1ஆம் தேதி தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி கட்டிடங்களின் தரம், கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கான தேவைகள், பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் இணைப்பு, கழிவறை ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

From around the web