பள்ளி கல்லூரிகளுக்கு தடை: எப்போதுதான் திறக்கப்படும்?

 
school


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில் விரைவில் பள்ளி கல்லூரிகள் திறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ஆசிரியர்கள் சங்கம் மற்றும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் பள்ளிகளை திறக்க கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் விரைவில் பள்ளி கல்லூரிகள் திறக்கும் அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டது. 

ஆனால் நேற்றைய ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பில் பள்ளி கல்லூரிகள் திறப்பதற்கு தடை தொடரும் என முதல்வர் அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும் விரைவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web