இன்று முதல் ஆவின்பால் விலை குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!

 
இன்று முதல் ஆவின்பால் விலை குறைப்பு: பொதுமக்கள் மகிழ்ச்சி!

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற திமுக மீண்டும் 10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சியைப் பிடித்தது என்பதும் அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் முதல்வராக பதவியேற்ற அன்று முக ஸ்டாலின் அவர்கள் ஐந்து முக்கிய உத்தரவில் கையெழுத்திட்டார் என்பதும், அதில் ஒன்று பால் விலை லிட்டருக்கு ரூபாய் மூன்று குறைக்கப்படும் என்பதும் ஆகும்.

இந்த நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இன்று முதல் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பெட்ரோல்-டீசல் உள்பட பல்வேறு பொருட்களின் விலைகள் உயர்ந்து கொண்டே இருக்கும் நிலையில் பால் விலை குறைக்கப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

milk

இன்று முதல் ஆவின் பாலின் புதிய விலை பட்டியல் பின்வருமாறு:

ஆவின் பால் நீல நிறம்: ஒரு லிட்டர் ரூ.40 அரை லிட்டர் ரூ.20
ஆவின் பால் பச்சை நிறம்: அரை லிட்டர் ரூ.22
ஆவின்பால் ஆரஞ்சு: அரைலிட்டர்; ரூ.24 ஒரு லிட்டர் ரூ.48
ஆவின்பால் இளஞ்சிவப்பு நிறம்: அரைலிட்டர்: ரூ.18.50
டீமேட் பால்: ரூ.57 ஒருலிட்டர்

From around the web