ரஜினி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட சின்னம் தேர்தல் ஆணையத்தில்   திரும்ப ஒப்படைப்பு!

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்தார். அதன்பின் அவர் ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பைத் தொடங்கி அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தார்

இந்த நிலையில் திடீரென கடந்த சில வாரங்களுக்கு முன் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும், தனது உடல்நிலை காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிலையில் ரஜினி கட்சி ஆரம்பிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவரது கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என்ற பெயர் வைக்கப்பட்டு இருந்ததாகவும், அந்த கட்சிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன 

rajini auto

இந்த நிலையில் ரஜினி தற்போது அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டு விட்டதால் ஆட்டோ ரிக்ஷா சின்னத்தை திரும்பவும் அவரது சார்பில் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் ஆட்டோரிக்ஷா சின்னத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அந்த ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் தேர்தலில் யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்,

From around the web