சிக்கினான் ஏடிஎம் கொள்ளையர்களின் தலைவன்!  

 
atm

சென்னையில் நடந்த ஏடிஎம் கொள்ளை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொள்ளை நடந்த ஒரே வாரத்தில் கொள்ளையர் தலைவனை தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர் 

சென்னையில் பல இடங்களிலும் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் ஏடிஎம் மையங்களில் நூதனமான முறையில் கொள்ளை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமாக கொள்ளை போனதாக தகவல் வெளிவந்ததை அடுத்து தமிழக போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர்

கொள்ளையர்கள் ஹரியானா மாநிலத்தில் இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அங்கு சென்ற கொள்ளையர்கள், முதலில் அமீர் என்பவரை கைது செய்தனர். அதன் பின் வீரேந்திர சிங், நசீர் ஆகியோரை கைது செய்த போலீசார் தற்போது கொள்ளையர் தலைவன் சௌகத் அலி என்பவரை கைது செய்து உள்ளனர் 

செளகத் அலி இன்று சென்னைக்கு அழைத்து வரப்பட இருப்பதாகவும் அவரிடம் தீவிர விசாரணை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சென்னையில் ஏடிஎம் கொள்ளை நடந்த ஒரே வாரத்தில் தமிழக போலீசார் கொள்ளையர் தலைவன் உள்பட 4 பேர்களை கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்ளையர்கள் ஏற்கனவே நான்கு மாநிலங்களில் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளதாகவும் தமிழகம் ஐந்தாவது மாநிலம் என்றும் கூறப்படுகிறது.

From around the web