ரஜினியின் வாழ்த்து போல்  வாழ்த்தியது போல அனைத்து மக்களின் நலன் காக்கும் அரசு அமையும்: ஸ்டாலின்

 
ரஜினியின் வாழ்த்து போல் வாழ்த்தியது போல அனைத்து மக்களின் நலன் காக்கும் அரசு அமையும்: ஸ்டாலின்

தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய முக ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தி அடையும் வகையில் ஆட்சிசெய்து தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என மனமார வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்

stalin

ரஜினியின் இந்த வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின் கூறியதாவது: முத்தமிழறிஞர் கலைஞர் மீது மிகுந்த மரியாதை கொண்டவரும் அன்புச் சகோதரருமான சூப்பர் ஸ்டார் 
ரஜினிகாந்த் அவர்களது வாழ்த்துகளுக்கு இதயபூர்வமான நன்றி!

அவர் வாழ்த்தியது போல அனைத்து மக்களின் நலன் காக்கும் அரசு அமையும் என்ற உறுதியினை வழங்குகிறேன்.


 

From around the web