அற்புதம்மாள் கோரிக்கை நிறைவேற்றம்: ரிலீஸ் ஆகிறார் பேரறிவாளன்

 
perarivalan

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 7 தமிழர்களில் ஒருவர் பேரறிவாளன் என்பதும் அவரை விடுவிக்க அவரது தாயார் அற்புதம்மாள் பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார் என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் சிறையில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவுவதால் பேரறிவாளனுக்கும் தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் எனவே அவருக்கு நீண்ட விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் அற்புதம்மாள் தரப்பிலிருந்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடப்பட்டது

arpudhammal

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுமுறை அளிக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து விரைவில் பெராரிவாளன் சிறையில் இருந்து ரிலீஸ் ஆக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

பேரறிவாளனை நிரந்தரமாக விடுதலை செய்ய கடந்த பல ஆண்டுகளாக போராடி வரும் அற்புதம்மாள் அவர்களுக்கு தற்போது தனது மகன் 30 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு இருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்துள்ளார்

From around the web