அரியர் தேர்வு ரத்து செல்லாது, தேர்வை நடத்துங்கள்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வுகள் ரத்து என்றும் அரியர் தேர்வுக்காக கட்டணம் கட்டிய் அனைத்து மாணவர்களும் பாஸ் என்றும் தமிழக அரசு அறிவித்தது. இது குறித்த உத்தரவு ஒன்றையும் தமிழக அரசு பிறப்பித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அரியர்ஸ் தேர்வு ரத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவின் மீது விசாரணை கடந்த சில நாட்களாக நடந்த நிலையில் அரியர் தேர்வு ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை ஏற்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

exam

மேலும் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலிக்கவும் தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அரியர் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த நிலையில் ஆரியர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்? தேர்ச்சி என அறிவிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? என்ற பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் கேட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web