என்னோடு தேர்தலில் நேருக்கு நேர் போட்டியிட தயாரா? பிரபல நடிகர் குஷ்பு சவால்!

 

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார் என்பதும் பாஜக சார்பில் அவர் வரும் தேர்தலில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது 

சென்னை திருவல்லிக்கேணி அல்லது மயிலாப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றில் குஷ்பு போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா? என பத்திரிகையாளர் சந்திப்பில் குஷ்பு சவால் விட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

udhayanidhi

திருவல்லிக்கேணி திமுக வேட்பாளராக உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அதே தொகுதியில் குஷ்புவும் போட்டியிட வாய்ப்பு உள்ளதால் குஷ்பு மற்றும் உதயநிதி ஸ்டாலின் வரும் தேர்தலில் நேருக்கு நேர் மோத அதிக வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து கூறி வருகின்றனர்

இந்த நிலையில் குஷ்புவின் இந்த சவாலுக்கு பதிலளிக்கும் வகையில் விரைவில் உதயநிதி ஸ்டாலினிடம் இருந்து அறிக்கை அல்லது டுவீட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web