ரஜினியின் இந்த திடீர் முடிவுக்கு இந்த இரண்டு ஸ்டார்கள் தான் காரணமா?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கி ஆன்மீக அரசியலை நடத்த இருப்பதாக அறிவித்த நிலையில் திடீரென கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கட்சி தொடங்குவது இல்லை என்றும் அரசியலில் இறங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார் 

ரஜினியின் இந்த அறிவிப்புக்கு அவரது உடல்நிலை காரணமாக கூறப்பட்டது என்பதும் ரஜினியின் இந்த அறிவிப்பால் அவருடைய கோடிக்கணக்கான ரசிகர்கள் மற்றும் ரஜினி மக்கள் மன்றத்தின் தொண்டர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ரஜினியின் இந்த முடிவுக்கு காரணம் இரண்டு முக்கிய நடிகர்கள் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் உள்ள இரண்டு பெரிய ஸ்டார்கள் சமீபத்தில் ரஜினியை சந்தித்ததாகவும், நடிகராக இருக்கும் புகழ் போல் அரசியலில் கிடைக்காது என்றும் அரசியலில் நம்மை அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்றும் எனவே அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டு விடுங்கள் என்று அறிவுரை கூறியதாகவும் தெரிகிறது. மேலும் இவர்களில் ஒருவர் அம்மாநிலத்தில் அரசியல் கட்சி தொடங்கி தோல்வி அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

rajinikanth

இதுகுறித்து அம்மாநிலத்தில் உள்ள இணையதளங்கள் செய்திகளை வெளியிட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்து விட்டு பின்வாங்கினால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என்று ரஜினி நினைத்ததாகவும் அந்த நேரத்தில்தான் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அதையே காரணம் காட்டி தனது நெருக்கமான நண்பர்கள் சொன்னதையும் அலசி ஆராய்ந்து, அரசியலில் ஈடுபடும் முடிவில் இருந்து பின் வாங்கி விட்டதாக கூறப்படுகிறது

இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும் இதுகுறித்த தகவல் தற்போது அம்மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web