6,7,8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறதா?

 
students

தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது என்பதும், அதேபோல் கல்லூரிகளும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து இன்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்தனர்.

இந்த ஆலோசனைக்கு பின்னர் 6,7,8ஆம் வகுப்புகளுக்கு மட்டும் விரைவில் நேரடி வகுப்புகள் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

அனேகமாக இம்மாத இறுதியில் அல்லது அக்டோபர் 1ஆம் தேதி முதல் 6,7,8ஆம் ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பு தொடங்குவது குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web