அதிமுக ஆதரவாளர்களாக மாறுகிறார்களா அரசு அதிகாரிகள்?

 

பொதுவாக அரசு அதிகாரிகளின் ஒட்டு மொத்த வாக்குகளும் திமுகவுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை அரசு அதிகாரிகள் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்று நினைப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

திமுக ஆட்சியில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் மற்றும் திமுக குடும்பத்தினர் போடும் உத்தரவுகளை செயல்படுத்தும் கட்டாய நிலை மற்றும் திமுகவினர்களை தட்டி கேட்க முடியாமல் தவிக்கும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆகியோர்களின் நிலைதான் தற்போது ஞாபகத்துக்கு வருகிறது 

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரிகளுக்கு ஓரளவு சுதந்திரம் வழங்கப்பட்டாலும் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் இருந்ததால் அரசு அதிகாரிகள் மீண்டும் தொல்லைக்கு உள்ளானார்கள்

eps

இந்த நிலையில் தற்போது முதல்வர் ஈபிஎஸ் ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது என்றும், அரசு அதிகாரிகள் சட்டம் என்ன சொல்கிறதோ அதை செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளார்கள் என்றும், இதனால் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை யாரும் முதல்வரையும் அமைச்சர்களையும் கேட்காமல் தாங்களாகவே முடிவு எடுக்கும் நிலைக்கு வந்துள்ளனர் என்றும், இந்த சுதந்திரம் தொடர வேண்டும் என்றால் முதல்வர் ஈபிஎஸ் ஆட்சி தொடர வேண்டும் என்று பெரும்பாலான அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஈபிஎஸ் ஆட்சியே மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web