கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? காற்றில் பறக்கவிடப்படுகிறதா?

 
கொரோனா விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? காற்றில் பறக்கவிடப்படுகிறதா?

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் ஞாயிறன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே

அதேபோல் பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் திருமணம் போன்ற விசேஷங்களுக்கு 100 பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் அனைவரும் மாஸ்க் அணிந்து தான் வெளியே வர வேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன 

bus

ஆனால் இந்த கட்டுப்பாடுகள் மக்களால் கடைப்பிடிக்கப்படுகிறதா என்றால் முழுமையாக இல்லை என்பதுதான் உண்மையாக உள்ளது. பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை என கட்டுப்பாட்டு விதிகளில் கூறப்பட்டிருக்கும் நிலையில் பல பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிகள் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது 

அதேபோல் சாலைகளில் செல்லும் பலர் மாஸ்க் அணியாமல் நடந்து செல்வதும் கொரோனா வைரஸ் அதிகரிப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு கூறியுள்ள கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web