அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா!

 
அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சமீபத்தில் நடந்த தேர்தல் காரணமாக கொரோனா வைரஸ் அதிகமானது என்பது இரண்டாம் அலை ஆரம்பமாகி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் முகக் கவசம் அணியாமல் பிரச்சாரம் செய்ததால் தான் தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது 

annamalai

இந்த நிலையில் அரசியல் கட்சி பிரமுகர்களும், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறித்த தகவல்களை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழக பாஜக துணைத் தலைவரும் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளருமான அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது 

இதனை அடுத்து அவர் தனது டுவிட்டரில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். தற்போது அண்ணாமலை அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன


 

From around the web