கால்நடை மருத்துவ படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்: முழு விபரங்கள்

 
application

ஏற்கனவே மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் தற்போது கால்நடை மருத்துவ கல்லூரிகளுக்கு விண்ணப்பம் இன்று முதல் பெறப்படுவதாக கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு:

 
2021-2022 ஆம்‌ கல்வியாண்டிற்கான (கால்நடை மருத்துவம்‌ மற்றும்‌ கால்நடை பராமரிப்பு பட்டப்படிப்பு (B.V.Sc & AH), உணவுத்‌ தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech- Food Technology), கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech Poultry Technology)) மற்றும்‌ பால்வளத்‌ தொழில்நுட்ப பட்டப்படிப்பு (BTech Dairy Technology) ஆகிய இளநிலை பட்டப்படிப்புகளின்‌ சேர்க்கைக்கு தமிழ்நாட்டைச்‌ சார்ந்த மாணவர்களிடமிருந்து 09.09.2021 காலை 10.00 மணி முதல்‌ 08.10.2021 மாலை 6.00 மணி வரை இணையதளம்‌ மூலமாக விண்ணப்பங்கள்‌ (online application) வரவேற்கப்படுகின்றன.

அயல்நாடு வாழ்‌ இந்தியர்‌ (NRIs) / அயல்நாடு வாழ்‌ இந்தியரின்‌ குழந்தைகள்‌ (Wards of NRIs)/ அயல்நாடு வாழ்‌ இந்தியரின்‌ நிதி ஆதரவு பெற்றோர்‌ (NRI sponsored) மற்றும்‌ அயல்நாட்டினர்‌ (Foreign National) மாணவர்கள்‌ 09.09.2021 காலை 10.00 மணி முதல்‌ 08.11.2021 மாலை 6.00 மணி வரை இணையதளம்‌ மூலமாக விண்ணப்பங்களை (online application) சமர்ப்பிக்கலாம்‌.

இணையதள விண்ணப்பங்கள்‌ மட்டுமே ஏற்றுக்‌ கொள்ளப்படும்‌. தகவல்‌ தொகுப்பேடு, சேர்க்கைத்‌ தகுதிகள்‌, தேர்வு செய்யப்படும்‌ முறை மற்றம்‌ இதர விவரங்களை www.tanuvas.ac.in மற்றும்‌ www2.tanuvas.ac.in என்ற பல்கலைக்கழக இணையதளங்களில்‌ காணலாம்‌.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

From around the web