நாளை முதல் ரேசன் கடைகள் செயல்படும் நேரம் அறிவிப்பு!

 
ration store

தமிழகத்தில் இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து காய்கறி கடைகள் மளிகை கடைகள் டாஸ்மாக் கடைகள் ரேஷன் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பால் மருந்து கடைகள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் ஓட்டல்கள் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது 

இந்த நிலையில் சற்றுமுன் ரேஷன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இன்று முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணிவரை ரேஷன் கடைகள் இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நான்கு மணி நேரத்தில் ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களை வாங்குவோர் தனிமனித உள்ள இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து வாங்கிச் செல்லலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

முழு ஊரடங்கு காரணமாக ஒரு வாரமாக அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில் ரேஷன் கடைகள் மட்டும் திறக்க அனுமதி கொடுப்பது மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

From around the web