அண்ணாமலை வேட்புமனு ஏற்பு: தேர்தல் அதிகாரியின் அதிரடி முடிவு

 
அண்ணாமலை வேட்புமனு ஏற்பு: தேர்தல் அதிகாரியின் அதிரடி முடிவு

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை அடுத்து கடந்த 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் முடிந்தது. நேற்றுடன் வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில் ஐயாயிரத்துக்கு மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது 

இந்த நிலையில் இன்று காலை 11 மணி முதல் வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்பட பலரது வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்தன

தன் மீதுள்ள வழக்குகள் குறித்து தனது வேட்புமனுவில் சரியாக குறிப்பிட வில்லை என்ற காரணம் கூறி பாஜக துணைத் தலைவரும் அரவக்குறிச்சி வேட்பாளருமான அண்ணாமலை வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது

murugan

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி அரவக்குறிச்சியின் தமிழக பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை வேட்புமனு ஏற்கப்பட்டு விட்டதாக தெரிகிறது. அதேபோல் தாராபுரத்தில் பாஜக தலைவர் எல் முருகனின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது

அண்ணாமலையின் வேட்புமனுவில் வழக்குகள் குறித்து சரியாக குறிப்பிடவில்லை என புகார் அளித்திருந்த போதிலும் அவரது வேட்பு மனுவை அதிரடியாக தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web