தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை தான் தலைவர்: மேலிடம் அறிவிப்பு

 
annamalai

தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் அண்ணாமலை என சற்றுமுன் பாஜக மேலிடம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது/ இதனால் தமிழக பாஜகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழக பாஜக தலைவராக இருந்த எல் முருகன் நேற்று மத்திய அமைச்சராக பதவியேற்றார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் யார் என்ற கேள்வி எழுந்தது 

இந்த நிலையில் சற்று முன் பாஜக மேலிடம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழக பாஜகவுக்கு அண்ணாமலை புதிய தலைவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாஜக மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மோடியின் ஈர்ப்பால் அரசியலுக்கு வந்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவருக்கு தற்போது தமிழக பாஜக தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக எந்த அளவுக்கு மக்களின் மனதை கவரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

annamalai

From around the web