அண்ணா பல்கலை செமஸ்டர் தேர்வுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு!

 
anna university

அண்ணா பல்கலைகழகத்தின் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு மற்றும் மறுதேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது.

முந்தைய தேர்வுகள் போலவே மறு தேர்வுக்கான வினாத்தாள் இருக்கும் எனவும் இந்த தேர்வுக்கு வரும் 7ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தேர்வுக் கட்டணத்தை ஜூன் மாதம் 12ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் அண்ணா பல்கலைகழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெங்கதேசன் அறிவுறுத்தி உள்ளார்

மேலும் ஆன்லைனில் தான் தேர்வுகள் நடைபெறும் என்றும், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு மற்றும் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்படும் என்றும், ஆன்லைன் தேர்விற்கான வினாத்தாள்கள் 30 நிமிடங்களுக்கு முன் கூகுள் க்ளாஸ் ரூம் மற்றும் மைக்ரோசாப்ட் டீம்ஸ் மூலமாக அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் தேர்வுகள் காலை 9.30 முதல் 12.30 வரையிலும், பிற்பகல் 2.30 முதல் 5.30 வரையிலும் இரண்டு பிரிவுகளாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web