அண்ணா பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு தேதிகள் அறிவிப்பு!

 
exam

கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த செமஸ்டர் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து புதிய தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் சற்றுமுன் தெரிவித்துள்ளார் 

ஜூன் 14ஆம் தேதி முதல் அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான கட்டணம் கட்டாத மாணவர்கள் ஜூன்3ஆம் தேதிக்குள் கட்டலாம் என்றும், ஏற்கனவே கட்டணம் கட்டியவர்கள் மீண்டும் கட்டணம் கட்ட தேவையில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2017 ஆம் ஆண்டு ரெகுலேஷன் படி ஜூன் 14-ஆம் தேதி தொடங்கும் இளநிலை முதுநிலை தேர்வுகள் குறித்த கால அட்டவணை இதோ:

exam

From around the web