பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை முக்கிய உத்தரவு!

 
பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை முக்கிய உத்தரவு!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இருப்பினும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வுகளையும் செய்முறை பயிற்சிகளையும் உடனடியாக முடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது 

இந்த நிலையில் சற்று முன் அண்ணா பல்கலைக்கழகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் அனைத்திலும் இறுதியாண்டு மாணவர்கள் உள்பட அனைவருக்கும் வரும் 31-ஆம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது

engineering

இதனை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகள் செய்முறைத் தேர்வுகளை நடத்த ஆயத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. விரைவில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறப்பட்டு வருவதால் அதற்கு முன்பே செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க அண்ணா பல்கலை உத்தரவிட்டதாக கூறப்படுகிறது

From around the web