இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு அட்டவணையை வெளியிட்டது அண்ணா பல்கலை!

 

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது 
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் இம்மாதம் 24-ஆம் தேதி முதல் தொடங்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே 
ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தத் தேர்வுகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே தகவல் தெரிவித்த நிலையில் தற்போது தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது 

நான்கு விடைகளில் ஒன்றை தேர்வுசெய்து எழுதக் கூடிய வகையில் கேள்விகள் இருக்கும் என்றும் ஒரு வினாவுக்கு ஒரு மதிபெண் கொண்டதாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது 

மொத்தம் கேட்கப்படும் 40 கேள்விகள் 30 கேள்விகளுக்கு சரியான விடை அளித்தால் போதும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. மேலும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு செப்டம்பர் 19 முதல் நவம்பர் 21ம் தேதி வரை பயிற்சி தேர்வு நடைபெறும் என்றும் இந்த தேர்வின் போது மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகத்தை பல்கலைக் கழக நிர்வாகிகள் இடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் அதன் பின்னர் செப்டம்பர் 24 முதல் 29-ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது  

From around the web