மேலும் ஒரு மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு: தமிழகத்தில் எப்போது?

 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஒரு லட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கவை

இந்த நிலையில் ஏற்கனவே மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது 

lockdown

சற்றுமுன் வந்த தகவலின்படி பஞ்சாப் மாநிலத்தில் இன்று முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா அதிகரித்து வரும் நிலையில் அம்மாநில அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து பஞ்சாபில் இரவு 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்குமென்றும், இந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

மருத்துவர்கள், காவலர்கள், செவிலியர்கள் ஆகியோர்கள் தவிர வேறு யாரும் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழகத்திலும் எப்போது இது குறித்த அறிவிப்பு வரும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web