பாஜகவுடன் அமமுக கூட்டணியா? வெற்றிவேல் தகவல்

 

பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலை ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் விடுதலை ஆனவுடன் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படும் என்று தெரிகிறது 

இந்த நிலையில்  தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேல் அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து சசிகலாவும் தினகரனும் இணைந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று தெரிவித்தார் 

மேலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை உறுதியாக இப்போதே சொல்ல முடியாது என்றும் பேச்சுவார்த்தைக்குப் பின்னரே உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறினார். மேலும் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அதிமுகவை மீட்கும் பணியை தொடங்குவார் என்று ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலாவின் கட்டுப்பாட்டுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வெற்றிவேலின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது  

From around the web