மாதந்தோறும் மின்கட்டணம், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை: அமமுகவின் தேர்தல் அறிக்கை!

 
மாதந்தோறும் மின்கட்டணம், வீட்டுக்கு ஒருவருக்கு வேலை: அமமுகவின் தேர்தல் அறிக்கை!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சற்றுமுன் வெளியிட்ட நிலையில் அந்த தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

அனைத்து கிராமங்களிலும் அம்மா கிராம வங்கி துவங்கப்படும்.

வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

விஐபி பாதுகாப்பு பணியில் சாலையோரம் பெண் காவலர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் 

68 சமூகங்கள் DNT சீர்மரபினர் உரிமை பெற்று தரப்படும்

நெல்லுக்கான ஆதார விலையாக ரூ.3000 மற்றும், கரும்புக்கான விலையாக ரூ.4000 கிடைக்கவும் உறுதி செய்வோம்

விவசாயிகளுக்கு வீடு தேடி இடுப்பொருட்கள் மானியத்துடன் வழங்கப்படும்

மின்கட்டணம் மாதந்தோறும் செலுத்தும்முறை மீண்டும் கொண்டு வர நடவடிக்கை

இவ்வாறு அமமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web