ரஜினியை சந்திக்க சென்னை வரும் அமித்ஷா: பாஜகவுக்கு வாய்ஸ் கொடுப்பாரா?

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் அரசியலுக்கு வரவில்லை என்பதை உறுதிபட சமீபத்தில் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தார். இந்த அறிவிப்பு பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது என்பதும் ஆனால் அவரது கோடான கோடி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் ரஜினியை விடாமல் விரட்டி கொண்டிருக்கும் பாஜக மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது ஜனவரி 14-ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார் என்றும், அவர் ரஜினியின் வீட்டிற்கு சென்று அவரை சந்தித்து உடல் நலம் குறித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது

amitshah

அதுமட்டுமின்றி பாஜகவுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஆனால் ரஜினி வாய்ஸ் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

மேலும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் அதிமுக தலைவர்களை சந்தித்து தொகுதி உடன்பாடு குறித்து அமைச்சர் அமித்ஷா பேச இருப்பதாகவும் 38 தொகுதிகளை அதிமுக கூட்டணியில் கேட்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

From around the web