இன்று அமித்ஷா சென்னை வருகை: கோபேக் ஹேஷ்டேக்கால் பரபரப்பு

 
இன்று அமித்ஷா சென்னை வருகை: கோபேக் ஹேஷ்டேக்கால் பரபரப்பு

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வர இருப்பதை அடுத்து தமிழகமே பெரும் பரபரப்பில் உள்ளது 

இன்று சென்னைக்கு வரும் அமித்ஷா இரண்டு நாட்கள் தமிழகத்தில் தங்கியிருப்பார் என்றும் அப்போது அவர் பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கூட்டத்திலும் கலந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது 

மேலும் அமித்ஷா சென்னையில் ரூ. 62,000 கோடி என்று திட்ட பணிகளை தொடங்கி வைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் அமித்ஷா வருகையை ஒட்டி கோபேக் அமித்ஷா என்றா ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. அகில இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் முதலிடத்தில் இருந்தாலும் வெல்கம் அமித் ஷா என்ற ஹேஷ்டேக்கும் டிரண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

goback amitshah

மேலும் தமிழக வருகையின் போது அமித்ஷா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசுவார் என்றும் அதே போல் முக அழகிரி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்படுகிறது. இவையெல்லாம் உண்மையில் நடக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் 

அதேநேரத்தில் தமிழகத்தில் தேர்தல் ஆய்வு பணிகளை நடத்துவது எப்படி என்பது குறித்து அமித்ஷா ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது. மேலும் அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்ய ஒரு செய்யவே அமித்ஷா வருகை தருவதாகவும் தெரிகிறது. பீகார் தேர்தலை வெற்றிகரமாக முடித்து விட்ட அமித்ஷா அடுத்ததாக தமிழகத்தை குறி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web