மணல் கொள்ளை செந்தில் பாலாஜி: டுவிட்டரில் கொதித்தெழுந்த கமல்ஹாசன்!

ஸ்டாலின் முதல்வர் ஆனதும் மாட்டுவண்டியில் சென்று ஆற்று மணலை அள்ளிக் கொள்ளுங்கள் என்றும் எந்த அதிகாரியாவது தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும் சமீபத்தில் செந்தில்பாலாஜி பேசியது குறித்து கமல்ஹாசன் கொதித்தெழுந்துள்ளார்.
சமீபத்தில் தேர்தல் பிரச்சார மேடையில் செந்தில்பாலாஜி பேசியபோது ஸ்டாலின் முதல்வராக 11 மணிக்கு பதவியேற்றார் என்றால் 11.05க்கு மாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் சென்று மணலை அள்ளிக் கொள்ளுங்கள், எந்த அதிகாரியும் உங்களை தடுக்க முடியாது, அப்படி தடுத்தால் எனக்கு போன் செய்யுங்கள், அந்த அதிகாரி அங்கே இருக்க மாட்டார் என்று செந்தில்பாலாஜி பேசினார். மணல் கொள்ளை குறித்து தான் அவர் இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் செந்தில்பாலாஜியின் இந்த பேச்சுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்து கமல்ஹாசன் அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தேர்தலில் வென்ற மறு நிமிடம் ஆற்று மணல் கொள்ளையைத் துவங்கி விடுவோம் என்கிறார் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. எங்கள் பெருந்துறை வேட்பாளர் நந்தகுமார் மணல் கொள்ளையை எதிர்த்து நீதிமன்றம் சென்று வாதாடி வென்றவர். அதன் காரணமாக கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான பின்னும் அஞ்சாமல் மக்கள் பணி செய்பவர். இதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்.