கூட்டணியா? தனித்து போட்டியா? கமல்ஹாசன் இன்று முடிவு!

 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில் திமுக, அதிமுக தவிர புதிதாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் முதல்முறையாக சட்டமன்ற தேர்தல் களத்தில் களமிறங்குகிறது 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிப்ரவரி 11ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசன் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவை சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளதாகவும், இந்த ஆலோசனையில் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியில் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்ற முடிவை கமலஹாசன் எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது

kamal

அந்த வகையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா என்று கமலஹாசன் முடிவு செய்ய இருப்பதாக கூறப்படுவதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொண்டர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு சென்னை ஸ்ரீவாரி மண்டபத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web