தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு: புதுச்சேரி கல்லூரி அறிவிப்பு!

 
தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு: புதுச்சேரி கல்லூரி அறிவிப்பு!

தமிழகத்தைப் போலவே தமிழகத்தின் அண்டை மாநிலமான புதுச்சேரியில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. புதுச்சேரியில் தற்போது குடியரசு தலைவர் ஆட்சி நடைபெற்று வருவதை அடுத்து அங்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் 

இந்த நிலையில் தற்போது வெளியிட்டுள்ள தகவலின்படி புதுச்சேரி பல்கலைகழகத்தின் அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. புதுச்சேரி பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், வரும் 19ஆம் தேதி தொடங்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைப்பு என்றும் அறிவிக்கப்பட்டது

pudhuvai

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக செய்முறை மற்றும் எழுத்துத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி பல்கலைகழக தேர்வுத்துறை அறிவித்துள்ளதை அடுத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட ஒத்திவைக்கப்பட்ட உள்ளன என்பது தெரிந்ததே.

From around the web